தும்பை செடியின் வரலாறு, வளர்ப்பு, மற்றும் மருத்துவ பயன்கள்.
Leucas Aspera/முடிதும்பை:
தும்பைப்பூ என்றெண்ணியதும், ஞாபகத்திற்கு வருவது தும்பையை போல வெண்மை என்ற வரிகள்தான். ஆனால் இலக்கியங்களில் தும்பை பூ என்பது போருக்கான அறிகுறியாக பயன்படுத்தப்பட்டது. என்ன வியப்பாக இருக்கிறதா? அரசன் ஒருவன் தும்பைப்பூ மாலையை கழுத்தில் அணிந்து இருந்தால் அவன் போருக்குச் செல்கிறான் என்று அர்த்தம். தொல்காப்பியத்திலூம், கம்பரின் இராமாயணத்திலும் இதற்கான குறிப்புகள் உள்ளது. இரவணனுடன் போர்தொடுக்க இராமர் சென்றபோது, துளசிமாலையோடு, தும்பைபூ மாலையையும் அணிந்ததாக கம்பர் எழுதியுள்ளர். தும்பைசெடிக்கு முடித்தும்பை என்று வேறொரு பெயரும் உண்டு. தும்பை செடியில் பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, கவிழ்ந்தும்பை, காவித்தும்பை என பல வகைகள் உண்டு. தும்பைச் செடி மருத்துவ மூலிகை செடி. ஐம்பது சென்டிமீட்டர் வரை உயரம் வளரக்கூடியது. தும்பை செடியின் இலை, பூக்கள், மருத்துவ குணங்கள் உடையது. வயல்வரப்புகளில் கிராமங்களில் புதர்களில் வளரும். சுலபமாக வளரக்கூடியது. இருந்தாலும் மணற்பாங்கான இடத்தில் அதிகம் காணப்படுகிறது. விதைகள் மூலம் வளரும் தன்மையுடையது. தும்பை செடியின் பூக்களில் தேன் இருக்கும். தும்பைச் செடி உடலுக்கு அதிக வெப்பத்தை கொடுக்கக் கூடியது. குளிர்ச்சி உடம்புக்கு மிகவும் சிறந்தது. இன்றைய பதிவில் தும்பை செடியின் வரலாறு பற்றியும், தும்பை செடியின் வளர்ப்பு பற்றியும், தும்பை செடியின் மருத்துவ குணங்களை பற்றியும் விரிவாக வாசிக்கலாம்

தும்பைப் பூவின் வரலாறு:

Sudagar krishnan channel
Thumbai Plant uses

திருவண்ணாமலை தல புராணத்தில் ஒரு கதை உண்டு. கிராமத்தில் விலைமாது வசித்து வருகிறாள். அவள் தினமும் காலையில் எழுந்து வரும்போது அவள் வீட்டு வாசலில் வெற்றிலை பாக்கில் யார் தாம்பூலம் வைத்து இருக்கிறார்களோ அவர்களோடு அன்றைய இரவுபொழுதை கழிப்பாள். அவளுடைய தொழில் தர்மமாகவே நினைத்து வாழ்ந்து வந்தாள். ஒருநாள் காலையில் எழுந்து வெளியே வருகிறாள். அப்போது வெற்றிலை தாம்பூலத்தில் மிகவும் வயதானவர் வைத்திருக்கிறார். அவரால் நடக்க கூட முடியாது. ஆனால் அவள் இன்று இரவு நீங்கள் வரலாம், போய் இரவு வாருங்கள் என்று கூறுகிறாள். வயதானவர் சென்ற உடனே அந்நாட்டின் மன்னன் அவள் வீட்டிற்கு வருகிறார். நாட்டின் மன்னன் அவளைப்பார்த்து நீ அழகாக இருக்கிறாய்! நான் உன்னோடு இன்று இரவை கழிக்க போகிறேன் என்று கூறுகிறார். அந்த வார்த்தையை கேட்டதும், அவள் இல்லை என்னுடைய தொழில் தர்மப்படி ஏற்கனவே வயதானவர் ஒருவர் வந்து விட்டார். அதனால் உங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. என்று கூறி விடுகிறாள். மன்னன் கோபத்தோடு, நான் இந்நாட்டு மன்னன். உன்னுடைய அழகில் மயங்கி போனேன். என்னிடம் அனைத்து செல்வங்களும் இருக்கிறது. எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள். நான் தருகிறேன் என்று கூறுகிறார். மன்னன் கூறிய வார்த்தைகளை பொருமையாக கேட்டுவிட்டு முடியாது என்று கூறுகிறாள். நான் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார். நீங்கள் என்னை கொன்றாலும் என்னுடைய தொழில் தர்மத்தை என்னால் மாற்ற முடியாது. நீங்கள் கொன்றால் உங்களுக்கு தான் பாவம் என்று கூறிவிடுகிறாள். உடனே மன்னன் சீ!போ… என்று கூறிவிட்டு சென்று விடுகிறான். அன்று இரவு வயதானவர் அவள் வீட்டிற்கு வருகிறார். மிகவும் வயதானவர் என்பதால் அங்கேயே சிறுநீர் கழித்து விடுகிறார், மலம் கழித்து விடுகிறார், வாந்தி எடுத்து விடுகிறார், இவை அனைத்தையுமே அந்த விலைமாது சகித்துக் கொண்டு கணவனைப் போல பாவித்து அவருக்கு பணிவிடை செய்து அவளுடைய தொழில் தர்மத்தை காப்பாற்றுகிறாள்! காலை விடிந்ததும், வயதானவர் கேட்கிறார் இவ்வளவு உன்னை நான் கஷ்டப்படுத்துகிறேன். உனக்கு கஷ்டமாக இல்லையா? என்று! இல்லை, இது எனது தொழில் தர்மம்! அப்பொழுது வயதானவர் காட்சியளிக்கிறார்! அவர்தான் சிவபெருமான்! அப்போது சிவபெருமான் உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் கேள்! நான் தருகிறேன் என்று கூறுகிறார். அடுத்தகனம் விலைமாது சிவபெருமானை பார்த்த மகிழ்ச்சியில் பதற்றத்தில் வரத்தை கேட்கிறாள். எப்பொழுதும் என்னுடைய கால் உங்கள் தலை மேல் இருக்க வேண்டும் என்று மாற்றி கேட்டு விடுகிறாள்! உங்களுடைய கால் என்னுடைய தலையின் மேல் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்பதை கேட்பதற்கு பதில் மாற்றி கேட்டு விடுகிறாள்! சிவபெருமான் சிரித்துக்கொண்டே நீ வரத்தை கேட்டு விட்டாய்; இதை மாற்ற முடியாது. அடுத்த பிறவியில் நீ தும்பை பூவாக பிறந்து அந்தத் தும்பைப்பூ என் தலைமேல் எப்பொழுதுமே எனக்கு பிடித்த மாதிரி சூடி இருப்பேன் என்று வரத்தைத் தந்து விடுகிறார். இதுதான் இந்த தும்பைப் பூவின் கதை! இந்த வரத்தாலேயே சிவபெருமான் தலையில் தும்பை பூக்கள் எப்பொழுதும் வைத்து வணங்குகின்றனர்!

தும்பை செடி வளர்ப்பு:
தும்பைப் பூவின் கதையை வாசித்து இருப்பீர்கள்! மருத்துவ குணங்கள் வாய்ந்த தும்பைச் செடியை வீட்டுத் தோட்டத்திலும், மாடித் தோட்டத்திலும் சுலபமாக வளர்க்கலாம். பூக்களின் விதைகளை எடுத்து வந்து சாதாரணமாக தூவிவிட்டால் வளர்ந்துவிடும்! இதற்கென்று தனியாக மண்கலவை தேவையில்லை. உங்கள் வீட்டு பக்கத்தில் மரங்களுக்கு அடியில் இருக்கும் மண்ணை எடுத்துவந்து வளர்ப்பு பைகளில் வைத்து, உங்கள் வீட்டிலேயே தயாரித்த காய்கறிகழிவு உரத்தையு சேர்த்து தும்பை பூ செடியின் விதைகளை தூவி விட்டாலே சுலபமாக முளைத்து வந்து விடும். இல்லையெனில், தும்பை பூச்செடிகள் எங்கு வளர்ந்து இருக்கிறதோ, அதை வேரோடு பிடுங்கி எடுத்து வந்து வளர்ப்பு பைகளில் நடவு செய்தால் சுலபமாக வளர்க்கலாம். தும்பைப் பூ செடி வளர்ப்பு பைகளில் நடவு செய்த பிறகு கண்டிப்பாக நிழற்பாங்கான இடத்தில் வைக்க வேண்டும். அப்பொழுதுதான் தும்பைப் பூச்செடி சுலபமாக துளிர்விட்டு வளர ஆரம்பிக்கும். ஒருமுறை தும்பை பூச்செடியை மாடி தோட்டம், அல்லது வீட்டு தோட்டத்தில் வைத்து விட்டால் தொடர்ந்து செடியின் விதைகளிலிருந்து தேவையான செடிகளை உருவாக்கிக் கொள்ளலாம். தும்பை பூச்செடிகள் மணற்பாங்கான இடத்தில் நன்றாக வளரும். எனவே தும்பை பூச்செடியை வளர்ப்பதற்கு வளர்ப்பு பைகளில் மணல் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. தும்பை பூச்செடியை மாடி தோட்டம் அல்லது வீட்டுத் தோட்டத்தில் வளர்ப்பதினால் பூச்செடியின் பூக்களில் இருக்கும் தேனை எடுப்பதற்காக பட்டாம்பூச்சிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். பட்டாம்பூச்சிகள் தொடர்ந்து தோட்டத்தில் வருவதினால் மகரந்த சேர்க்கை நடைபெற்று தோட்டத்தில் தரமான பூக்களும், காய்கறிகளும் அதிக விளைச்சலையும் எடுக்கலாம்.

தும்பை செடியின் மருத்துவ பயன்கள்:
மனிதர்களுக்கு குறட்டை பெரிய தீராத வியாதியாக உருவெடுத்து இருக்கிறது. குறட்டை பிரச்சினையை தும்பை பூக்கள் கொண்டு சுலபமாக குணமாக்கலாம். ஐம்பது தும்பை பூக்களை எடுத்து, 50 மில்லிலிட்டர் நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி மூக்கில் மூன்று சொட்டுக்கள் வீதம் இருபத்தியொரு நாட்கள் விட்டுவர குறட்டைவிடும் பிரச்சனைகள் நீங்கும். தலைவலி, சைனஸ், தலை நீர்கோத்தல், பிரச்சினைகளுக்கு தும்பை செடியின் இலைகளை சாறு எடுத்து மூன்று சொட்டுக்கள் மூக்கில் விட்டால் அனைத்தும் சரியாகிவிடும். பாம்பு🐉 கடித்துவிட்டால் தும்பை செடியின் இலைகளை வாயில் போட்டு மென்று தின்றால் வாந்தி, பேதி வழியாக விஷம் வெளியே வந்து விடும். ஆனால் ஒருநாள் முழுவதும் தூங்க கூடாது. மூன்று நாட்கள் உப்பில்லாமல் பத்தியம் இருப்பது அவசியம். தும்பை செடியின் பூக்களைப் பறித்து நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்துக் குளித்தால், தலை பாரம், தலையில் நீர் கோர்த்தல், போன்ற பிரச்சினைகள் தீரும். தேள் கடித்தால் தும்பை பூ செடியின் இலைகளை சாறு எடுத்து தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் விஷம் முறியும். தும்பை செடியின் இலைகளை அரைத்து உடம்பில் பூசி வந்தால், சொறி, சிரங்கு விஷக்கடி, அலர்ஜி போன்றவை நீங்கும். உடம்பில் பூசிய உடன் அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். தும்பைச் சாறும், விளக்கெண்ணையும் கலந்து உட்கொண்டால் வயிற்றில் உள்ள கிருமிகள் வெளிப்படும். தும்பைச் சாறும், வெங்காய சாறும் கலந்து ஐந்து நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆசனவாய் புண்கள் குணமாகும். நீண்ட நாட்களாக மார்ச்சளி பிடித்து அவதிப்படுபவர்கள் தும்பைப் பூவை சட்னி செய்து தினமும் ஒருவேளை உட்கொண்டு வந்தால் மார்சளி முற்றிலும் குணமாகும். தும்பை பூ சாறு 500 மில்லி லிட்டர் எடுத்து தேங்காய் எண்ணெய் 500 மில்லி லிட்டர் உடன் சேர்த்து கலந்து நன்றாக காய்ச்சி வெட்டுப் பட்ட காயங்களில் தடவி வந்தால் ஆறாத காயங்கள் வெகு விரைவாகவே ஆறிவிடும். பெண்கள் கர்ப்பப்பை சம்பந்தமான நோய்களில் அதிகம் அவதிப்பட்டு கொண்டிருப்பார்கள். கர்ப்பப்பை பிரச்சனை உள்ள பெண்கள் தும்பைப் பூவை வெள்ளாட்டுப் பாலில் கலந்து நன்றாக காய்ச்சி அந்த சாற்றை வடிகட்டி வெறும் வயிற்றில் ஒரு மண்டலம் குடித்து வந்தால், கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் குணமாகும் கர்ப்பப்பையில் ஏற்படும் கட்டிகள் சரியாகும். கர்ப்பப்பையில் வரும் கருப்பை புற்று நோய் வராமல் தடுக்கும். தும்பை கொழுந்து இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து அந்த பொடியை சாதாரணமாக நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர கபம் சார்ந்த பிரச்சினைகள் தீரும். தீராத வயிற்று வலி, வயிறு கோளாறுகள் அடிக்கடி மலம் கழித்தல், சாப்பிட்ட உடனே மலம் கழித்தல், இதுபோல பிரச்சனை உள்ளவர்கள் தும்பை பூக்களை பறித்து கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு, பூக்களோடு தேங்காய் பூ துருவி சேர்த்து நன்றாக விழுது போல் அரைத்து, விழுதை சாப்பிட்டு வர தீராத வயிற்று வலி, வயிற்றுக் கோளாறுகள், ஆசன வாயில் புண்கள், தொண்டைக்குழியில் புண்கள், நாக்கில் வரும் புண்கள், வயிற்றுக் குடலில் ஏற்படும் புண்கள், போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் குணமாக்கும் ஆற்றல் வாய்ந்தது தும்பை பூக்கள். தும்பை பூக்களை பறித்து இரவுப்பொழுதில் பனி பெய்யும்போது, பனிப்பொழிவில் வைத்து, காலையில் எடுத்து தும்பை பூக்களை நன்றாக கசக்கி சாறு எடுத்து சாறுகளை கண்ணில் விட்டால் கண் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். தும்பை பூ செடியின் அருகில் அமர்ந்து தும்பை பூக்களை ஒன்று ஒன்றாக பறித்து நாற்பத்தியெட்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தொண்டையில் வரும் கட்டிகள் குணமாகும். தொண்டை பகுதியில் வரும் தைராய்டு பிரச்சனையால் சுரக்கும் சுரப்பிகளை சுரக்காமல் செய்து தைராய்டு பிரச்சினையை போக்குகிறது. தும்பை பூ செடியின் இலைகளை நன்றாக அரைத்து உடலில் இருக்கும் தேமல் இடத்தில் தொடர்ந்து பூசிக்கொண்டே வந்தால், தேமல் குணமாகிவிடும். விஷப்பூச்சிகள் கடித்தால் தும்பை இலையை அரைத்து சிறிதளவு பூச்சிகள் கடித்த இடத்தில் தேய்த்தால் கடி குணமாகும். தும்பை இலைகளை அரைத்து சிறிதளவு எடுத்து உள்ளுக்கும் சாப்பிட வேண்டும். தும்பை இலையை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் தலையில் நீர் கோர்த்தல் போன்றவை குணமாகும். தும்பை பூக்களை பறித்து கசக்கி தும்பை பூவின் சாறு மூக்கில் சொட்டு உள்ளே விட்டால் தீராத தலை வலி உள்ளவர்களுக்கு உடனடியாக தலைவலி சரியாகும். தும்பை பூக்களை அதிகாலையில் பசும்பாலில் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் தீராத விக்கல் தீரும். இந்தப் பதிவில் வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழே உள்ள வீடியோவை பாருங்கள்! உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

இந்தப்பதிவில் தும்பை செடியின் வளர்ப்பு பற்றியும், தும்பைப்பூ வரலாறு பற்றியும், தும்பை செடியின் மருத்துவ குணங்கள் பற்றியும், விரிவாகப் வாசித்து இருப்பீர்கள். இந்தப் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். நன்றி!

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *