புறா..புறா.. அழகுப் புறா..ஆசைப் புறா..! - (புறாக்களின் வகைகள் படங்களுடன்..!!_)
புறாக்கள் என்றாலே அழகுதான்.. வெண்மை நிறம் கொண்ட இத்தகையப் புறாக்களைக் காணும்போது நேரு பறக்கவிட்ட சமாதானப் புறாவைதான் எனக்கு நினைவுக்கு வரும்.
அதுபோல சாம்பல் நிற புறா, காட்டுப்புறா, பந்தயப் புறா இப்படி புறாக்களில்தான் எத்தனை வகை..!!
காட்டுப்புறா காடுகளில் அதிகம் வாழக்கூடியது. யாருக்கும் கட்டுப்படாமல் தான்தோன்றித் தனமாக திரிபவை.. இவைகளைக் கண்டால் எனக்கு சிபி சக்ரவர்த்தி தான் ஞாபகம் வரும்..
கொஞ்சம் இருங்க.. யாரோ கிராஸ் போஸ்ட் செய்றாய்ங்க (கிராஸ் டாக் மாதிரி கிராஸ் போஸ்ட்.. ஹா.ஹா...)
ஒன்னுமில்லீங்க நம்ம தமிழ்பேரண்ட் சம்பத்தான் குறுக்கிட்டுவிட்டார்..
என்ன சம்பத் .. என்ன சொல்ல வர்றீங்க..
ஓ... சிபி சக்ரவர்த்தியைப் பத்தி உங்களுக்குத் தெரியுமா? ம்.. என்ன..? சின்ன வயசுல படிச்சிருக்கீங்களா?
![]() |
| சாம்பல் நிறப் புறா |
சரி. அவர் என்ன செய்தார்னு சொல்லுங்களே பார்ப்போம்..
சிரிக்கபடாது.. உண்மையா சொல்லுங்க.. தெரியுமா? தெரியாதா?
ம். நீங்க சொல்றது சரிதான்.. புறாவை பிடிச்ச வேடனுக்கு அந்தப் புறாவின் எடைக்கு எடை தன்னோட சதையை வெட்டிக் கொடுத்தார்ன்னு படிச்சீங்களா?
யெஸ். நீங்க சொல்றது சரிதான்.. நான் அவரைப்பத்திதான் சொன்னேன்.
சரி. விடுப்பா பதிவை முடிச்சுட்டு வந்துடுறேன்..
ம் எங்க விட்டேன்.. காட்டுப்புறா...
காட்டுப்புறா , கோயில் புறா, மாடப் புறா.. ன்னு நம்ம நாட்டுல நிறையப் புறா இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட இனம் வித்தியாசமா இருக்குங்க..
அதுக்குப் பெயர் பச்சைப்புறாவாம் இதுக்கு வேற பேரு மரகதப்புறா.
நான் பார்த்ததில்லை.. நீங்க பார்த்திருக்கீங்களா? இதோ படத்தைப் பாருங்க.. பச்சைப்புறாவைப் பிடிச்சிட்டேன்..(நன்றி விக்கிபீடியா)
![]() |
| Emerald Dove |
இந்த பச்சைப் புறாவுக்கு அதிக கிராக்கி இருக்காம்.. பார்க்கிறதுக்கு கிளி மாதிரியே இருக்குமாம். இதனோட இரத்தத்தை நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு குடித்தால் அந்த வியாதி குணமாகிவிடும் என்பது இன்றும் கிராமத்திலுள்ளவர்களின் நம்பிக்கை.. ஆனால் விஞ்ஞானப் பூர்வமாக இது உண்மையா என்பது ஏதும் தகவல் இல்லை.
![]() |
| மரகத புறா - Chalcophaps indica |
புறாவிலேயே ஹீரோவா இதைத்தான் சொல்றாங்க.. இது பந்தயப்புறா.. பந்தயங்களில் பறக்கவிடுவாங்க.. பந்தயம்னா சாதாரணம் இல்லீங்க.. இமயத்திலிருந்து பறக்கவிட்டா கன்னியாகுமரி வந்து சேருகிற மாதிரியான தொலைவு வரைக்கும் கூட வைப்பாபாங்களாம்..
என்ன ஒரு ஆச்சர்யம்ன்னா.. இந்த வகைப்புறாக்கள் எங்கு கொண்டுபோய் விட்டாலும் ஆகாயத்தை ஒரு வட்டம் போட்டுட்டு சரியான திசைநோக்கிப் பறக்க ஆரம்பிச்சிடுமாம்..
இந்த வகை புறாக்கள் ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகளிலருந்து இறக்குமதி செய்கிறார்களாம்.
இந்த பெல்ஜியம் புறாக்களின் முட்டை விலையே 25000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரைக்கும் போகுமாம்.. (அடேயப்பா..! எனக்கு தலை கிறுகிறுங்கது.. சம்பத் உங்களுக்கு எப்படி இருக்கு..)
பந்தயப் புறாக்கள்(Race Pigoens) எப்படி உருவாக்குகிறார்கள்?
இங்கதான் நம்ம ஆளுங்களோட புத்திசாலித்தனம் இருக்கு. ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புறாக்களோடு நீண்ட தூரம் பறக்கூடிய நம்ம நாட்டுப் புறாக்களோடு கலப்பினம் செய்து புதிய புறாவினத்தை உருவாக்குகிறார்கள்.
இந்த புதிய புறாக்கள் பந்தயங்களில் நீண்ட தூரம் பறக்கும் சக்தி கொண்டவையாம். இந்த பந்தயப் புறாக்களில் "ஹோமர்" என்ற ரகம் பந்தயத்திற்கு ஏற்ற ரகம்னு சொல்றாங்க. இதனுடைய நுட்பத் திறனும் அதிகம்.
இந்த வகைப் புறாக்கள் இல்லாமல்.. நம்மளோட அழகு ரசனை வெளிப்படுத்தற மாதிரி அழகுப் புறாக்களும் இருக்கு..
பேன்சி புறாக்கள்(Fancy Pigeons )
பார்ப்பதற்கு மட்டுமே அழகா இருக்கிற இந்த வகைப்புறாக்கள் பல நிறத்தில் இருந்தாலும் இது ஒரு சோம்பேறி..! (அதாவது என்ன மாதிரி. என்னை வீட்ல 'சோம்பேறி'ன்னு தான் அப்பா கூப்பிடுவார்)
இதுங்களோட பூர்வீகமும் பெல்ஜியம்தான்... இது வீடு, தோட்டம், மாடின்னு.. வீட்டைச் சுற்றியே வரும். வெளியில் கொண்டுபோய் ஒரு நாலு தெரு தள்ளிவிட்டால் கூட வீட்டிற்கு வரத்தெரியாத ஒரு மக்குப் புறா இது.
ஒரு சில வகையான புறாக்களின் படங்கள் கீழே..:
Post Comment
Subscribe to:
Post Comments (Atom)
























10 Responses to “புறா..புறா.. அழகுப் புறா..ஆசைப் புறா..! - (புறாக்களின் வகைகள் படங்களுடன்..!!_)”
22 February 2012 11:16 PM
புறாக்கள் மிக அழகு....
23 February 2012 2:41 AM
பறவைகள் பலவிதம் .. உங்கள் பதிவுகள் பல ரகம்
23 February 2012 2:42 AM
இன்று
எனது முதல் தொலைகாட்சி நிகழ்ச்சி ...
23 February 2012 3:18 AM
வணக்கம் பழனி!
இப்படி விதவிதமான புறாக்களை நான் இதுவரை பார்த்ததில்லை. இங்கு இறைச்சிக்ககவும் புறாக்கள் வளர்கிறார்கள் பெரிய பெரிய பண்ணைகளில்!!
23 February 2012 10:12 AM
மனதை கொள்ளை கொள்ளும் புறாக்கள்.அழகு.
23 February 2012 9:46 PM
மிக அழகானவை. ஆனால் சில புறாக்களின் பெயர் அறிய ஆசையாக உள்ளது. நீங்கள் படத்தோட விட்டிட்டீர்கள். ஆயினும் வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.
24 February 2012 12:44 PM
முதல் படம் ..Fan tail//.ஆட்டபுறா என்றும் சொல்வாங்க
லாஸ்ட் படம் ....frill back
மற்றவை நினவில் இல்லை
24 February 2012 11:48 PM
அழகான புறாக்களின் அணிவகுப்பு அருமை.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
28 February 2012 9:07 PM
alagana purakal super
1 March 2012 9:41 AM
வணக்கம் நண்பரே தங்களது பதிவினை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.நன்றி
http://blogintamil.blogspot.in/2012/03/blog-post.html
Post a Comment
நிறைகுறைகளை இங்கு தெரிவிக்கலாம்..!!