தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களுக்கும் அரசு வேலை - தமிழக அரசு உத்தரவு
இனி தனியார் கல்லூரிகளில் நர்சிங் படித்திருந்தாலும் அவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பு என்ற அறிக்கை ,தனியாரில் நர்சிங் கோர்ஸ் முடித்தவர்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கிற நடுத்தர வர்க்கத்தினர் தான் இத்தகைய படிப்புகளை விரும்பிப் படிக்கின்றனர். தனியார் மருத்துவமனைகளிலேனும் பணி செய்து ஒரு சொற்ப வருமானத்தை ஈட்டலாம் என்பதே இதற்கான காரணம். எப்பாடு பட்டேனும் , தங்களின் வருமானம் இருந்தால் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் உள்ளவர்கள்தான் பெரும்பாலும் இத்தகைய - குறுகிய கால - வேலைவாய்ப்புகளைத் தரக்கூடிய படிப்புகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
இப்போது இந்த அரசு அறிவிப்பின் காரணமாக இவர்களது மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகியிருக்கிறது. இவர்களது நீண்ட நாளைய கனவு பலித்திருக்கிறது. தங்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் பணி வேண்டும் என்ற நெடுநாளைய கோரிக்கை இந்த அறிவிப்பின் மூலம் நிறைவேறியிருக்கிறது. தினமலர் நாளிதழில் வெளிவந்த செய்தி கீழே..
தனியார் நர்சிங் கல்லூரிகளில் படிப்பை முடித்தவர்களுக்கும் இனி அரசு மருத்துவமனைகளில் நர்ஸ் பணியில் நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசின் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தற்போது அரசு நர்சிங் கல்லூரிகள், அரசு நர்சிங் பள்ளிகளில் படிப்பை முடித்தவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ நிறுவனங்களிலும் நர்ஸ் பணியில் நியமிக்கப்படுகின்றனர்.
அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் நர்சிங் கல்லூரிகள் மற்றும் நர்சிங் பள்ளிகளில் படிப்பை முடித்தாலும், அரசு கல்லூரிகளைப் போல மருத்துவ கல்வி இயக்குனரகம் நடத்தும் தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுகின்றனர். 2 பேருக்கும் மருத்துவ கல்வி இயக்குனரகமே தேர்ச்சி சான்றிதழை வழங்குகின்றது.
ஆனால் அரசு வேலை வாய்ப்பு வரும் போது தனியார் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு நர்ஸ் பணி வழங்கப்படுவதில்லை. அரசு கல்லூரிகளில் படித்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் நர்ஸ் பணி வழங்குவதை போல தங்களுக்கும் அரசு பணி வழங்க வேண்டும் என்று தனியார் நர்சிங் கல்லூரிகள் மற்றும் நர்சிங் பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அரசு கல்லூரிகளில் படித்தவர்களுக்கு வேலை வழங்கும் போது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு வேலை வழங்கப்படாதது இந்திய அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று அரசு கருதுகிறது.
எனவே வரும் காலங்களில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ நிறுவனங்களில் நர்ஸ் காலி இடங்கள் ஏற்படும் போது அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் நர்சிங் படித்து முடித்தவர்களை நிரப்புவது என்று அரசு முடிவு செய்துள்ளது. 2 தரப்பினரும் புதிதாக அமைக்கப்பட உள்ள மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tweet

மருத்துவம் மற்றும் சுகாதாரம் தொடர்பான வலைதளங்கள் அட்டவணையில்..
சுகாதாரத்துறைப் பற்றிய மேலும் பல பயனுள்ள தளங்கள் | |
தமிழ்நாடு செவிலியர்களின் பதிவு மற்றும் படிப்பு கல்வி நிலையங்களுக்கு அனுமதி வழங்கும் குழுமம் | |
அரசு சுகாதாரத்துறை ஊழியருக்கான உபயோகமான வலைபூ | |
தமிழக அரசு வெளியிடும் செய்திகள் பெரும் இணையப்பக்கம் | |
இந்திய அரசின் அனைத்து படிப்பு, செவிலியர் பதிவின் அதிகார குழுமம் | |
குழந்தைகள் நலம் பற்றிய தமிழ் வலைபூ | |
நன்றி நண்பர்களே.. மற்றுமொரு பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்.
Post Comment
Subscribe to:
Post Comments (Atom)

3 Responses to “தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களுக்கும் அரசு வேலை - தமிழக அரசு உத்தரவு”
22 January 2012 9:36 PM
சிறந்த திட்டம்.... திறமையானவருக்கு வேலை கிடைக்கனும்...
23 January 2012 9:03 AM
பயனுள்ள தகவல்கள் ! பல நல்ல தளங்களை தொகுத்து வழங்கியதற்கு நன்றி நண்பரே !
23 January 2012 8:50 PM
பயனுள்ள தகவல்கள.. தொகுப்புக்கு நன்றி
Post a Comment
நிறைகுறைகளை இங்கு தெரிவிக்கலாம்..!!