இவர்களை என்ன செய்யலாம்? - ஒரு சூடான அரசியல் பதிவு..!!!
பிரபல நாளிதழில் வெளிவந்த செய்தி.. உத்திரப்பிரதேச வாக்காளர்களுக்கு பணம் சப்ளையா? என்று கேள்வி கேட்டு தொடங்கியிருக்கிறது அந்த செய்தி..
செய்தியின் சாரம் இதுதான்.. உத்திரபிரசேத்தில் தேர்தல் அறிவித்திருக்கும் இந்நேரத்தில், பிடிப்பட்ட ஒரு வேனில் ரூ. 13. 5 கோடி பணம் சிக்கியிருக்கிறது.
அது நிச்சயம் நல்லப்பணமாக இருக்க முடியாது. கள்ளப்பணமாகதான் இருக்க முடியும். இது தேர்தல் காரணமாக வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய எடுத்துச் சென்றிருக்கலாம் என்பது காவல் துறையின் கணிப்பு.
அது பற்றி விசாரணை நடந்துகொண்டிருக்கிறதாம்.
நான் சொல்ல வந்ததே இதுதான்.. பணம் எங்காவது முளைத்தா வந்திருக்கும்?. அல்லது குப்பைகூழங்களில் இருந்து தோன்றும் புழுக்களைப் போல, நெளிந்து நெளிந்து வந்து வண்டியில் ஏறியிருக்குமா?
யார் கொடுத்தது.. யார் அனுப்பியது எங்கிருந்து எடுத்து வந்தது? எங்கே செல்கிறது? . எவருக்குச் செல்கிறது.? எங்கு செல்கிறது என்பதெல்லாம் விசாரணையில் நிச்சயம் தெரிந்துபோகும்.
ஆனால் இதன் பிண்ணனியில் பிரபல அரசியல்வாதிகளோ, பிரபலங்களோ இருப்பின் அந்த செய்தி அப்படியே காற்றில் கரைந்துவிடும்.
பின்னே? பிரபலங்களைப் பற்றியோ, அரசியல்வாதிகளைப் பற்றியோ அவர்கள் ஒரு நாளும் குற்றச் செய்திகளை வெளியிட மாட்டார்கள். காரணம் ஆட்சி அவர்களிடம் இருக்கும் அல்லது ஆட்சிக்கு வரக்கூடியவர்களாக இருப்பார்கள்.
அல்லது இவர்களைப் பற்றிய குற்றங்கள் வெளிப்படினும் அதன் நிலை என்னவாக இருக்கும்.. சமீபகாலங்களில் நாம் கண்கூடாக, காதார கேட்டுவரும் செய்திகளைப் போன்றுதான் இருக்கும்.
இவர்கள் கைதாவார்கள், கையசைத்துக்கொண்டே வண்டியில் ஏறுவார்கள்.. இந்நிலையிலும் இவர்களின் போலி சிரிப்புகள் வாய்நிறைய இருக்கும். சிறை சென்று சில நாட்களோ, சில மாதங்களோ இருந்து விட்டு வெளியில் வந்தாலும் ஏதோ ஒரு பெரிய தியாகத்தை செய்து உள்சென்று வந்துவிட்ட பிரமையுடன் மீண்டும் தயராவார்கள்.. அரசியலுக்கும், ஊழலுக்கும்..
இந்த இடைப்பட்ட காலத்தில் சிறைசென்று வந்த அனுபவங்களையும் புத்தகமாக எழுதிவிடுவார்கள். இவர்கள் என்ன மாகாத்மா காந்தியா? தியாகச் செம்மல்களா?
சரி. இப்படிப் பட்டவர்களை ஒன்றும் செய்ய முடியாதா? காவல் துறை என்ன செய்கிறது? அவர்கள் தங்களது கடமையைத் தான் செய்வார்கள்..
எப்படி? இப்படித்தான்..!!
இவர்கள் தங்களது கடமைகளைச் செய்வதிலும் சில சிக்கல்கள் இருக்கிறது. சில காரணங்கள் இருக்கிறது.
ஒன்று பயம். பணியில் நீடிக்க முடியாது.., குடும்ப உறுப்பினர்கள் நிம்மதியாக இருக்க முடியாது.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எத்தனையோ இடர்பாடுகள் எதிர்கொள்ள நேரிடும்.
அப்படியே ஒரு சிலர் நீதி, நேர்மை , நியாயம் என்று விஜயகாந்த் படத்தில் வருவதுபோல வசனம் பேசிபவராக மட்டுமே இருந்துவிட்டு, அதை செயல்படுத்த மாட்டார்கள். அவர்களின் எண்ணங்களையும் அப்படியே மழுங்கடித்து, செயல்படமுடியாத, மனதிற்குள் மட்டுமே பொறுமும் இயல்புடையவர்களாகவே மாறிவிடுவார்கள்..
இன்னும் ஒரு சிலர் இருக்கிறார்கள். எந்த ஆட்சி வந்தாலும் அவர்களுக்கு சாதகமாக மாறிவிடுவார்கள். இவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்கள்.
இதற்கெல்லாம் முழுமுதற் காரணம் என்ன? நம் ஜனநாயகம் தான். யார் வேண்டுமானாலும் எதுவும் செய்யலாம்.. அதிகாரமும், அரசும் கையில் இருந்தால் அவர்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் ஒரு இழிவான நிலைதான் இங்கு இருக்கிறது.
நமது முன்னோர்களும், தியாகிகளும், எதற்காக ஜனநாயகத்தை விரும்பினார்களோ, எதற்காக ஜனநாயக ஆட்சி மலரவேண்டும் என்று துடித்தார்களோ, எந்நிலையில் இருப்பவர்களும், 'எத்தகையவர்களும் அரசாளலாம்', 'நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்' என்று சொல்லிவந்தார்களோ, பாடுபட்டு சுதந்திரம் வாங்கி கொடுத்தார்களோ, - அவற்றை - அந்த ஜனநாயகத்தை - சுதந்திரத்தை - இவர்கள் குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள்.
கிடைத்த வாய்ப்பை, ஒரு சில நாய்களும், நரிகளுமே, தந்திரங்களைக் கொண்டு நயமாக மக்களை சிக்க வைத்து, பண ஆசை காட்டி, வாக்குகளை பணம் என்ற காகிதத் தாள்களை கொடுத்து பறித்துவிடுகிறது.. பறிக்க முனைகிறது..
சரி, இப்படிப்பட்டவர்களை என்ன செய்வது? கடமையைச் செய்ய முடியாதவர்களையும், கடமை செய்ய விடாது தடுப்பவர்களையும், நேரத்திற்கு தகுந்தமாதிரி மாற்றிக்கொள்ளும் அதிகாரிகளையும் என்ன செய்வது? பண ஆசையும், பணப்பித்தும் பிடித்து திரியும் இத்தகையவர்களை என்ன செய்வது? நீங்களே சொல்லுங்கள்..!!!!
நான் இப்படிப்பட்டவர்களை, முந்தைய பதிவில் குறிப்பிட்ட மழைக்காடுகளில் விட்டுவிடலாம் என்கிறேன்., கருநாகமும், பச்சோந்தியும் , விஷ உயிர்களும் உள்ள காட்டில்விட வேண்டும்.. திக்கு தெரியாத காட்டில் இவர்களை விட்டாழொழிய இவர்கள் திருந்தமாட்டார்கள்.. திருந்தவே மாட்டார்கள்..!!!
இப்பதிவானது பொதுவான கண்ணோட்டத்துடன், என்னுடைய எண்ணவோட்டத்தில் எழுதப்பட்டது. யாரையும் குறிப்பிடுவன அல்ல. பதிவைப் பற்றிய தங்கள் கருத்துகளும், விவாதங்களும் வரவேற்கப்படுகின்றன.. நன்றி நண்பர்களே..!!!
Tweet

Post Comment
Subscribe to:
Post Comments (Atom)

6 Responses to “இவர்களை என்ன செய்யலாம்? - ஒரு சூடான அரசியல் பதிவு..!!!”
9 January 2012 6:08 PM
இதுகளுக்காகத்தான் லோக்பால் வேண்டும் என்கின்றோம் .
9 January 2012 9:40 PM
தொழில்நுட்பம்,அரசியல்,விழிப்புணர்வு,மாவட்டங்களின் கதைகள் என பல துறைகளிலும் கலக்கும் தங்கம் பழனி வாழ்த்துக்கள் நண்பா....
9 January 2012 11:12 PM
தமிழ் நாட்டு கலாச்சாரம் அங்கேயும் தொற்றிவிட்டது போலும்
10 January 2012 1:25 AM
இப்போதெல்லாம் தவறு என்பது காவல்துறைக்கு தெரிந்தே நடக்கிறது. அவர்களும் கண்டும்காணாமல் இருந்து விடுகின்றனர். என்ன செய்வது?
10 January 2012 7:56 AM
namma arasiyal vathikalai pathi than makkalukku nallavea theriumea.. vote mulamaga nallavarkalaga thervu seiyatum endru andavanai venndikolvom...
16 January 2012 12:20 AM
எல்லாரும் ஒரே மாதிரி தானே பாஸ்
ரொம்ப தொல்லையா போச்சு...
நண்பன்- வித்தியாசமான விமர்சனம்.
Post a Comment
நிறைகுறைகளை இங்கு தெரிவிக்கலாம்..!!